ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பரமத்திவேலூரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
Published on

பரமத்திவேலூர்

பரமத்திவேலூரில் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜையையொட்டி பொதுமக்கள் அதிக அளவில் நடமாட்டம் உள்ள இடங்களில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடைகள் வைக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்தன. இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றக்கோரி வேலூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் பரமத்திவேலூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பரமத்திவேலூரில் உள்ள முக்கிய பகுதிகளில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை செயல் அலுவலர் திருநாவுக்கரசு உத்தரவின் பேரில் துப்புரவு ஆய்வாளர் குருசாமி, துப்புரவு மேற்பார்வையாளர் ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலையில் பேரூராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மேலும் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் பேரூராட்சி நிர்வாகத்தினர் எச்சரிக்கை விடுத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com