ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நெல்லை டவுனில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
Published on

நெல்லை:

நெல்லை மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்புகள் மற்றும் விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்பால் வாகனங்கள் செல்ல முடியாமலும், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர்சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவுப்படி நேற்று முன்தினம் நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோடு, நயினார் குளம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உதவி ஆணையாளர் பைஜூ, மாநகராட்சி செயற்பொறியாளர் நாராயணன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள், நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினார்கள். நயினார்குளம் சாலையில் நின்ற வாகனங்களும் அப்பு றப்படுத்தப்பட்டன.

X

Daily Thanthi
www.dailythanthi.com