திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைகிறார்

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் இன்று காலை பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைகிறார்
Published on

சென்னை,

தலைமைக்கு எதிராக பேசியதாக கூறி கடந்த ஏப்ரல் மாதம் கே.பி இராமலிங்கம் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா காலகட்டத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி வந்தார்.

இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் கொரோனவை சிறப்பாக கையாண்டு வருகிறது என்றும், 144 தடை உள்ளபோது அனைத்து கட்சி கூட்டம் தேவையில்லை என்றும் கே.பி இராமலிங்கம் கருத்து தெரிவித்தார். இதனால், எம்.பி. கே.பி.ராமலிங்கம் திமுக கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் இன்று காலை 11 மணிக்கு சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா 2 நாள் பயணமாக இன்று சென்னை வர உள்ளநிலையில், அவரையும் கே.பி.ராமலிங்கம் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com