ரெனால்ட் குழுமத்தின் தலைமை நிர்வாகிகள் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜயுடன் சந்திப்பு

இச்சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் ரெனால்ட் நிறுவனம் மேற்கொண்டுவரும் உற்பத்தி மற்றும் பொறியியல் செயல்பாடுகள், மாநிலத்தில் அந்நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
ரெனால்ட் குழுமத்தின் தலைமை நிர்வாகிகள் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜயுடன் சந்திப்பு
Published on

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர்ஜோசப் விஜயுடன் இன்று (18.5.2026) தலைமை செயலகத்தில், ரெனால்ட் குழுமத்தின் உயர்மட்ட அலுவலர்கள் சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பின் போது, தமிழ்நாட்டில் ரெனால்ட் நிறுவனம் மேற்கொண்டுவரும் உற்பத்தி மற்றும் பொறியியல் செயல்பாடுகள், மாநிலத்தில் அந்நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டின் மோட்டார் வாகன உற்பத்தியில், ரெனால்ட் குழுமம் மேற்கொண்டுவரும் மதிப்புமிக்க கூட்டாண்மையைப் பாராட்டினார்கள். மேலும், நிறுவனத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு முழுமையான ஆதரவை வழங்கும் என்பதை தெரிவித்து, மாநிலத்தில் ரெனால்ட் குழுமம் தொடர்ந்து முதலீடுகளை மேற்கொள்ளுமாறு ஊக்குவித்தார்.

இச்சந்திப்பின்போது, இந்திய ரெனால்ட் குழுமத்தின் தலைமை செயல் அலுவலர் ஸ்டீபன் டெப்லேஸ் (Mr. Stephane Deblaise), ரெனால்ட் குழுமத்தின் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் துணை தலைவர் ஹம்சா திர் மற்றும் இந்திய ரெனால்ட் குழுமத்தின் கார்ப்பரேட் விவகாரங்கள் பொது மேலாளர் நரசிம்மன் புருஷோத்தமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com