தொகுதி மறுவரையறை மசோதாவின்போது திமுக வெளிநடப்பு செய்யப்போவதாக தகவல் - அமைச்சர் நிர்மல்குமார்

ஒட்டுமொத்த தமிழக நலனையும் பாஜகவிடம் அடகு வைக்க திமுக முயற்சிக்கிறது என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.
தொகுதி மறுவரையறை மசோதாவின்போது திமுக வெளிநடப்பு செய்யப்போவதாக தகவல் - அமைச்சர் நிர்மல்குமார்
Published on

மதுரை,

மதுரையில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அரசியல் காரணங்களுக்காகவே மத்திய அரசு தற்போது தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டு வருகிறது. இதன் மூலம் மக்கள் தொகை அடிப்படையில் தமிழகத்தின் எம்.பி. தொகுதிகள் குறைய வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் அவசியம் இல்லாமல் தொகுதி மறுவரையை கொண்டுவருகிறார்கள். இது சிறுபான்மை மக்களை ஒதுக்கும் செயல். எனவே, தமிழகத்தின் உரிமைகளைக் காக்க அனைவரும் ஒருங்கிணைந்து இந்த மசோதாவை எதிர்க்க வேண்டும்.

திமுக ஏற்கனவே பாஜகவோடு கைகோர்த்து அவர்களுக்கு ஆதரவாக தொகுதி மறுவரைவு மசோதாவிற்கு ஆதரவாக வெளிநடப்பு வாக்குறுதி கொடுத்திருப்பதாக தகவல் வருகிறது. முன்னதாக ஏப்ரல் மாதம் அவர்கள் தீர்மானம் கொண்டுவந்தார்கள், அந்த தீர்மானத்தின்படி, திமுக மொத்தமாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றால், மொத்தமாக எதிர்க்க வேண்டும்;

மசோதாவிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களிக்க வேண்டும்; ஆனால் மறுவரைவு மசோதாவின்போது திமுக வெளிநடப்பு செய்யப்போவதாக தகவல் வருகிறது. அது தமிழகத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிற்கே செய்யும் மிகப்பெரிய துரோகமாக இருக்கும். ஆட்சியில் இருந்தபோதும் எடுத்த முடிவுக்கும் இல்லாதபோது எடுக்கும் முடிவுக்கும் திமுக தனது குடும்பத்தை காப்பாற்ற ஒட்டுமொத்த தமிழக நலனையும் பாஜகவிடம் அடகு வைக்க பார்க்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com