இந்திய கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களை சந்தித்த இலங்கை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்

மீனவர்களிடையேயான பிரச்சினைகளுக்கு தீர்வு காணல் குறித்து கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களை சந்தித்த இலங்கை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்
Published on

சென்னை,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் அவர்களை, இலங்கை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்தனர். மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் இரா.முத்தரசன், மாநில கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், தேசியக் குழு உறுப்பினர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் ஆகியோர் உடன் இருந்தனர்.

இலங்கை குழு

இலங்கை குழுவில், நாடாளுமன்ற உறுப்பினர் சிலோன் தமிழ் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜி.ஜி.பொன்னம்பலம், ஜனநாயக தமிழரசு கட்சித் தலைவர் கே.வி.தவராசா, தமிழ்த் தேசிய பசுமை இயக்கத் தலைவர் பி.ஐங்கரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்த் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் எஸ்.கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய ஒருங்கிணப்பாளர் டி.சுரேஷ், பேச்சாளர் கே.சுகேஷ், கொள்கை பரப்புச் செயலாளர் என்.காண்டீபன் - ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

மீனவர்கள் பிரச்சினை

இலங்கை தமிழர்கள் எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள், சிங்களர்களுக்கு நிகராக தமிழர்களும் இலங்கையில் அனைத்து உரிமைகளையும் பெற்று நல்லிணக்கத்தோடு வாழும் வகையிலான சமஷ்டி குடியரசு முறை, ஈழ தமிழ் இனப்படுகொலை தொடர்பான விசாரணை மற்றும் தவறிழைத்தோருக்கு உரிய தண்டனை வழங்கல், இலங்கை தமிழ் மீனவர்கள் மற்றும் இந்திய தமிழக மீனவர்களிடையேயான பிரச்சினைகளுக்கு தீர்வு காணல் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com