காரையூர் அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

காரையூர் அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரையூர் அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை
Published on

காரையூர் அருகே உள்ள ஒலியமங்கலத்திலிருந்து சுந்தம்பட்டி வரை பல ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலை அமைக்கப்பட்டது. இச்சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சில இடங்களில் மண் சாலை போல் காட்சி அளிக்கிறது. இரவு நேரங்களில் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com