60 அடி கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு

60 அடி கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்கப்பட்டார்.
60 அடி கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு
Published on

கீரமங்கலம் அருகே உள்ள குளமங்கலம் தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மனைவி அன்னக்கொடி (வயது 65). நேற்று மாலை அன்னக்கொடி தனது வீட்டின் பின்பக்கம் சென்ற போது தோட்டத்தில் உள்ள 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தார். இதையடுத்து மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்க முயன்றுள்ளனர். ஆனால் முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த கீரமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜராஜசோழன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியை கயிறுகட்டி பாதுகாப்பாக மேலே தூக்கி மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com