ஏரியில் மிதந்த முதியவர் பிணம் மீட்பு

விக்கிரமங்கலம் அருகே ஏரியில் மிதந்த முதியவர் பிணம் மீட்கப்பட்டது.
ஏரியில் மிதந்த முதியவர் பிணம் மீட்பு
Published on

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் 75 வயது மதிக்கத்தக்க முதியவரின் பிணம் ஒன்று மிதப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் விக்கிரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த முதியவரின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com