

சென்னை,
வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனதாக தேடப்படும் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு பத்திரமாக தாயகம் திரும்பிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தால் சுமார் 60 தமிழர்கள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் காணாமல் போயுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையையும் அளிக்கிறது.
நேபாள நாட்டு அரசுடன் இணைந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்திட மத்திய அரசையும், அப்பணிகளுக்கான ஒருங்கிணைப்பையும் , முறையான தகவல் பரிமாற்றத்தையும் உறுதி செய்திட மாநில அரசையும் வலியுறுத்துகிறேன்.
காணாமல் போனதாக தேடப்படும் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு பத்திரமாக தாயகம் திரும்பிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.