நேபாளத்தில் திடீர் வெள்ளம்: தமிழர்கள் உள்பட 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தவிப்பு..!

கும்பகோணத்தை சேர்ந்த 22 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேபாளத்தில் திடீர் வெள்ளம்: தமிழர்கள் உள்பட 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தவிப்பு..!
Published on

காத்மாண்டு,

நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் திடீர் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் தமிழர்கள் உள்பட 400க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் ஹெலிகாப்டர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், நீர்மட்டம் அதிகமாக இருப்பதால் சில பகுதிகளில் ஹெலிகாப்டர்களை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழர்கள் 57 பேர் சிக்கினர்

இந்நிலையில், நேபாளத்துக்கு புனிதப் பயணம் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 57 பேர் ராசுவா மாவட்டத்தின் திமுர் பகுதியில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

அவர்கள் அங்குள்ள பாதுகாப்புப் படை முகாமில் தஞ்சமடைந்துள்ளதாகவும், அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, ஆற்றங்கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான உயரமான பகுதிகளுக்குச் செல்லுமாறு நேபாள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

400க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தவிப்பு

இந்த நிலையில், கும்பகோணத்தை சேர்ந்த 22 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் இருந்து தப்பியவர்கள் நேபாள ராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளர். மேலும் வெள்ளத்தில் சிக்கி இருக்கும் தமிழர்களை மீட்க வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நலத்துறை தீவிரம் காட்டி வருகிறது. மேலும், 400க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இந்த வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

19 பாலங்கள், 40 கிலோ மீட்டர் சாலைகள், சுமார் 200 வாகனங்கள் நீரில் அடித்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com