அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள் தரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்அதிகாரிகளுக்கு மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அறிவுரை

அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள் தரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்துத்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஹர்சகாய் மீனா அறிவுரை வழங்கியுள்ளார்.
அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள் தரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்அதிகாரிகளுக்கு மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அறிவுரை
Published on

ஆய்வுக்கூட்டம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத்துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறையின் முதன்மை செயலாளருமான ஹர்சகாய் மீனா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் மோகன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், மாவட்டத்தில் அனைத்துத்துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து துறை வாரியாக அதிகாரிகளிடம் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஹர்சகாய் மீனா விரிவாக கேட்டறிந்தார்.

அறிவுரை

மேலும் அரசின் திட்டங்கள் ஒவ்வொன்றும் தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களாகவும், தமிழக மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்காகவும் செயல்படுத்தப்பட்ட திட்டங்களாகவே உள்ளது. எனவே துறை சார்ந்த அலுவலர்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து மேற்கொள்வதோடு தரமான முறையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது உடனடி தீர்வு கண்டு தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தீர்வு காணப்படாத மனுக்களின் நிலை குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஒரு திட்டம் சிறப்பாக அமைய வேண்டுமென்றால் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஆகவே அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com