

சென்னை,
விவசாய நிலங்களை விவசாயம் அல்லாத பயன்பாட்டிற்கு மாற்றுவற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு விதித்துள்ளது.
விவசாய நிலங்களை விவசாயம் அல்லாத நிலமாக மாற்ற, ஏற்கனவே உள்ள விதிகளில் புதிய திருத்தங்களை தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது.
இதன்படி விளைநிலங்களை விவசாயம் அல்லாத பயன்பாட்டு நிலமாக மாற்றவும், கட்டுமானங்கள் மேற்கொள்ளவும் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு விதித்துள்ளது.
விவசாயம் அல்லாத நிலமாக மாற்றி கட்டுமானப்பணிகள் மேற்கொள்ள ஆவணங்களை சமர்ப்பிப்பது அவசியம் என்றும், நிலத்தின் கிரயம் அல்லது குத்தகைப் பத்திரம், பட்டா நகல் என 9 ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.