ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

13 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் சென்னை பல்லவன் இல்லத்தில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.
ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்
Published on

சென்னை,

13 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் சென்னை பல்லவன் இல்லத்தில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாநில தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினர். பொது செயலாளர் கர்சன் முன்னிலை வகித்தார்.

போராட்டத்தின்போது, மாநில தலைவர் கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுகு கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 8 ஆண்டுகளாக அகவிலைப்படி நிலுவைகள் வழங்கப்படவில்லை. மருத்துவ காப்பீட்டு திட்டமும் வழங்கப்படவில்லை. இதுவரை தமிழக அரசு ஓய்வூதியம் வழங்காமல் காலதாமதம் செய்து வருகின்றது. எங்களது கோரிக்கைகளுக்கும் தீர்வு கிடைக்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com