தமிழகத்தின் உயர்கல்வித்துறையை மீட்டெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் - மாணிக்கம் தாகூர்

இன்று உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கையைத் தாக்கல் செய்யும் அமைச்சர் விஸ்வநாதனுக்கு மாணிக்கம் தாகூர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாணிக்கம் தாகூர்
Published on

சென்னை,

இத்துறை சார்ந்த ஆக்கப்பூர்வப் பணிகளுக்கு முழு ஆதரவளித்து வழிநடத்தும் தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு நெஞ்சார்ந்த நன்றிகள் என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை

பெருந்தலைவர் காமராஜர் கண்ட உயர்ந்த கல்விக்கனவை நனவாக்கி, தமிழகத்தின் உயர்கல்வித்துறையை மீட்டெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

பெரும்பாலான நிதி நிர்வாக மற்றும் தொடர் செலவினங்களுக்கே சென்றுவிடும் சூழல், தொலைதூரக் கல்வி வருவாய் இழப்பு, மத்திய UGC நிதி முடக்கம் மற்றும் பல்கலைக்கழக நிதி பற்றாக்குறை போன்ற கட்டமைப்பு சவால்களைச் சீரமைப்பது மிக முக்கியம். ஒரு பக்கம் ஊழலை ஒழித்து, மறுபுறம் வலதுசாரி/RSS சக்திகளின் ஊடுருவலை முறியடித்து, பல்கலைக்கழகங்களை மீட்டெடுத்து மாணவர்களுக்கு உலகத்தரக் கல்வியையும் பேராசிரியர்களுக்குப் பலத்தையும் தர வேண்டும்.

இன்று உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கையைத் தாக்கல் செய்யும் அமைச்சர் விஸ்வநாதனுக்கு வாழ்த்துகள்!

பெருமிதம் கொள்கிறோம்

வெற்றி தமிழகம் என்ற பாதையில் இத்துறை சார்ந்த ஆக்கப்பூர்வப் பணிகளுக்கு முழு ஆதரவளித்து வழிநடத்தும் தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!

2,150+ உயர்கல்வி நிறுவனங்கள், 60+ பல்கலைக்கழகங்களின் மறுமலர்ச்சிக்கான வரலாற்று நிதிநிலை அறிக்கையாகவும், உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை 50% GER என்ற மைல்கல்லைத் தாண்டி முன்னெடுத்துச் செல்லும் திட்டமாகவும் இது அமையும் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com