அரிசி விலை கிலோவுக்கு ரூ.27 அதிகரிப்பு; ஏற்றுமதியை தடை செய்ய கோரிக்கை

தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.27 அதிகரித்துள்ளது. அரிசி ஏற்றும தியை தடை செய்ய வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரிசி விலை
Published on: 

கிடுகிடு உயர்வு

தமிழ்நாட்டில் அரிசி விலை கடந்த சில மாதங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பருவமழை பற்றாக்குறை காரணமாக நெல் விளைச்சல் குறைந்து வரத்து குறைவால் அரிசி தட்டுப்பாடு காரணமாக அரிசி விலை உயர்ந்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் விற்பனை செய்யப்பட்ட 26 கிலோ எடை கொண்ட அரிசி பைகள் ரகத்திற்கு ஏற்ப ரூ.300 முதல் ரூ.600 வரை அதிகரித்து உள்ளது. தமிழ்நாட்டுக்கு தேவையான அரிசி காவிரி டெல்டா மாவட்டங்கள், மதுரை, விழுப்புரம், விக்கிரவாண்டி, சேலம், கள்ளக்குறிச்சி போன்ற பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்காளம் போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

26 கிலோ பை அரிசிகள்

இந்தநிலையில், புழுங்கல் பொன்னி அரிசி, பச்சை அரிசி, நீராவி மூலம் அரை வேக்காடு பக்குவத்தில் தயாரிக்கப்படும் புழுங்கல் அரிசி (ஸ்டீம் அரிசி) போன்ற அரிசிகள் குறிப்பாக அதிகளவில் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரி விக்கின்றனர்.அதன்படி, சென்னையில் விற்பனை செய்யப்படும் 26 கிலோ எடை கொண்ட பை அரிசிகள் விலை விவரம் (அடைப்புக்குள் ஜூலை மாதம் விலை) வருமாறு:-

புழுங்கல் பொன்னி அரிசி - ரூ.1,900 (ரூ.1,400), ஆர்.என்.ஆர். பொன்னி அரிசி ரூ.1,700 (ரூ.1,100), சோனா மசூரி பச்சரிசி - ரூ.2,000 (ரூ.1,400), ஸ்டீம் அரிசி ரூ.1,800 (ரூ.1,100), பாசுமதி அரிசி (30 கிலோ) - ரூ.3,800 (ரூ.3400) சிவாஜி मी (25 ) .2,000 (.1,850).

கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.27

மேற்கண்ட 26 கிலோ எடை கொண்ட அரிசி பைகளின் விலை நிலவரப்படி ஒரு கிலோவுக்கு சில்லறை விலை ரூ.20-ல் இருந்து ரூ.27 வரை உயர்ந்துள்ளது என் பது குறிப்பிடத்தக்கது.அரிசி விலையேற்றம் குறித்து சென்னை கொத்தவால்சாவடி அரிசி வியாபாரி சங்கரலிங்கநாதன் கூறும்போது, "தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களிலும் போதுமான மழை இல்லாததால் நெல் விளைச்சல் குறைந்து அரிசி விலை ஏறி வருகிறது.

அதேபோன்று, இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதியும் தற் போது தடையின்றி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் இங்கு ரூபாயில் அரிசியை வாங்கி டாலரில் விற்று அதிகளவில் பணம் சம்பாதிக்கின்றனர். இத னாலும் அரிசி விலை ஏறி வருகிறது. எனவே, அரிசிக்கான ஏற்றுமதிக்கு தடை விதித்தால் அரிசி விலை குறையும் என்று எதிர்பார்க்கலாம்" என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com