கரை புரண்டு ஓடும் காவிரி ஆறு; 40 வீடுகளை சூழ்ந்த வெள்ளம் - 120 பேர் மீட்பு

காவிரி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தால் 40-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.
கரை புரண்டு ஓடும் காவிரி ஆறு; 40 வீடுகளை சூழ்ந்த வெள்ளம் - 120 பேர் மீட்பு
Published on

ஈரோடு,

மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளைச் சேர்ந்த நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்டங்களில் காவிரி கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சிக்கு உட்பட்ட கந்தன்பட்டறை பகுதியில் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள 40-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் அங்கு வசித்த 120-க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com