உத்திரமேரூர் அருகே விளையாட்டு மைதானம் அமைக்க கோரி சாலை மறியல்

உத்திரமேரூர் அருகே விளையாட்டு மைதானம் அமைத்து தர வலியுறுத்தி ஏராளமான கிராமத்து இளைஞர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
உத்திரமேரூர் அருகே விளையாட்டு மைதானம் அமைக்க கோரி சாலை மறியல்
Published on

அதிகாரிகளுக்கு கோரிக்கை

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த பெருநகர் கிராமத்தில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் ஏராளமான மாணவர்கள் பல்வேறு விளையாட்டுகளில் தேர்ச்சி பெற்று பல்வேறு பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த கிராமத்தில் இளைஞர்கள் பயிற்சி மேற்கொள்ள வசதியாக விளையாட்டு மைதானம் இல்லாமல் உள்ளனர். இதனால் மாநில அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இளைஞர்களுக்கான விளையாட்டு மைதானம் அப்பகுதியில் அமைத்திட பல்வேறு அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்திருந்தனர்.

சாலை மறியல்

ஆனால் கோரிக்கைக்கு செவிமடுக்காமல் அதிகாரிகள் இருந்து வந்ததால் ஆத்திரமடைந்த கிராமத்து இளைஞர்கள் உத்திரமேரூர் பெருநகர் சாலையில் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது இளைஞர்கள் விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com