பெண்களிடம் 4¼ பவுன் நகை பறிப்பு

பெண்களிடம் 4¼ பவுன் நகை பறித்தவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
பெண்களிடம் 4¼ பவுன் நகை பறிப்பு
Published on

மதுரை சிக்கந்தர் சாவடி சுசி காலனியை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 57). சம்பவத்தன்று இவர் கூடல்நகர் மெயின் ரோட்டில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வாலிபர்கள் 2 பேர் அந்த வழியாக வந்தனர். அவர்கள் திடீரென்று மாரியம்மாள் அணிந்திருந்த 1 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மதுரை மகாத்மா காந்தி நகர் பவானி நதிதெருவை சேர்ந்தவர் உமா மகேசுவரி (44). சம்பவத்தன்று இவர் சின்ன சொக்கிகுளம் ஜவகர் தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பினார். இதுகுறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com