

வெலிங்டன்,
குன்னூர் அருகே உள்ள பர்லியார் ஊராட்சிக்கு உட்பட்ட முத்திரி எஸ்டேட் பகுதி யில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பழங்குடியினர் நல நிதி ஒதுக்கீட்டின் கீழ் கடந்த 2021-22-ம் ஆண்டு ரூ.27.65 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. முத்திரி எஸ்டேட் முதல் இந்திரா நகர் பழங் குடியினர் குடியிருப்பு வரை செல்லும் இந்த சாலையை கடந்து, இந்திரா நகர் பகு தியில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக, சாலையின் மேல்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் சாலையில் விழுந்த மண், பாறைகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் 30 அடி உயரத்தில் ஒரு பாறை ஆபத்தான நிலை யில் அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிறது.
இதனால் அந்த வழியாக பொதுமக் கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மழை பெய்தால் மீண்டு மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் தடுப்புச்சுவர் மற்றும் மழைநீர் வடிகால் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.