பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நாளை நிறுத்தம்

பராமரிப்பு பணிகள் காரணமாக ரோப் கார் சேவை நிறுத்தப்படுகிறது.
பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நாளை நிறுத்தம்
Published on

பழனி,

மலை மீது அமைந்துள்ள உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் பக்தர்கள் எளிதாக சென்றுவர ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகள் பயன்பாட்டில் உள்ளது. இதில், விரைவாகவும், பழனி மலையின் இயற்கை அழகை ரசித்தபடியும் செல்லலாம் என்பதால் பெரும்பாலான பக்தர்கள் ரோப்கார் சேவையை தேர்வு செய்கின்றனர். குறிப்பாக வெளியூர், வெளிமாநில பக்தர்களுக்கு ரோப்கார் சிறந்த சுற்றுலா அனுபவத்தை கொடுக்கிறது.

இந்த ரோப்கார் நிலையத்தில் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி அன்றைய தினம் ரோப்கார் சேவை நிறுத்தப்படுகிறது. எனவே பக்தர்கள் படிப்பாதை, மின்இழுவை ரெயிலை பயன்படுத்தி மலைக்கோவில் சென்று வரலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com