அழுகிய நிலையில் ஆண் பிணம்

சேத்தியாத்தோப்பு அருகே அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது.
அழுகிய நிலையில் ஆண் பிணம்
Published on

சேத்தியாத்தோப்பு,

சேத்தியாத்தோப்பு அடுத்த பெரியநற்குணம் கிராமத்தில் உள்ள வெள்ளாறு சுடுகாடு பகுதியில் நேற்று 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து சோத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனா. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்து கிடந்தவரின் உடலை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். இருப்பினும் அவா யார் எந்த ஊரைச்சேர்ந்தவர் என்ற விவரம் உடனடியாக தொயவில்லை. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர், அவர் எப்படி இறந்தார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com