கட்டுமான பணி செய்த ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.1 கோடியே 80 லட்சம் பாக்கி : அனல் மின் நிலைய நுழைவு வாயிலை முற்றுகையிட்டு போராட்டம்

கட்டுமான பணி செய்த ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.1 கோடியே 80 லட்சம் பாக்கி வைத்திருப்பதாக கூறி அனல் மின் நிலைய நுழைவு வாயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.
கட்டுமான பணி செய்த ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.1 கோடியே 80 லட்சம் பாக்கி : அனல் மின் நிலைய நுழைவு வாயிலை முற்றுகையிட்டு போராட்டம்
Published on

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே ஊரணம்பேடு கிராமத்தில் தமிழக அரசின் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்பட்டது. இதில் 2 யூனிட்டுகளில் 1,320 மெகாவாட் மின் நிலையம் அமைக்க ரூ.9 ஆயிரத்து 800 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி இதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டு பணிகளை தொடங்கியது. அப்போது மத்திய அரசின் நிறுவனம் தனியார் கட்டுமான நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து கொண்டு கட்டுமான பணிகளுக்கான மணல், ஜல்லி, இரும்பு கம்பி மற்றும் இதர பொருட்கள் உதிரிபாகங்கள் பெறுவதற்காகவும் லாரிகள் மூலம் பொருட்களைக் கொண்டு வருவதற்காகவும் சிறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணிகளை மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில் இந்த தனியார் நிறுவனம் திடீரென மூடப்பட்டது. இதனை தொடர்ந்து கட்டுமான பணிகளை செய்து வந்தவர்களுக்கு லாரிகளை பயன்படுத்தியதற்கான அதன் உரிமையாளர்களுக்கு ரூ.1 கோடியே 80 லட்சம் பாக்கி வைத்துள்ளதை மத்திய அரசின் நிறுவனம் வழங்க கடிதம் வழங்கி தனது கணக்குகளை முடித்து கொண்டு வெளியேறியது.

இந்த நிலையில் மத்திய அரசின் நிறுவனம் சிறுகுறு நிறுவனங்களுக்கும், லாரி உரிமையாளர்களுக்கும் நிலுவை வைத்துள்ள தொகையை வழங்காமல் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக இழுத்தடித்து வந்தது. இதையடுத்து சிறுகுறு நிறுவனத்தினர் மற்றும் லாரி உரிமையாளர்கள் நேற்று எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் 1,320 மின் உற்பத்தி திறன் கொண்ட மின் நிலையத்தின் நுழைவு வாயில் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல மணி நேரம் அனல் மின் நிலையத்துக்கு பல மணி நேரம் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவானது.

அதன் பின்னர் மத்திய அரசின் நிறுவனம் சிறு குறு ஒப்பந்ததாரர்கள் மற்றும் லாரி உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு ஏற்படாத நிலையில் மீண்டும் போராட்டத்தை தீவிர படுத்த உள்ளதாக சிறுகுறு நிறுவன ஒப்பந்ததாரர்கள், லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com