சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; பயணி கைது

விசாரணையில் அந்த பயணி கேரளாவை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; பயணி கைது
Published on

சென்னை,

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு இன்று விமானம் வந்தது. அந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது, தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த பயணியின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த சோதனையில் அந்த பயணி ரூ. 10 கோடி மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா போதைப்பொருளை கடத்தி வந்தது தெரியவந்து. இதையடுத்து போதைப்பொருளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அந்த பயணியை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பயணியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கேரளாவை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கேரள பயணியிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com