திருச்சி விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

விமானத்தில் செல்ல இருந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
திருச்சி விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
Published on

திருச்சி,

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 4 மணி அளவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சார்ஜா செல்ல தயாராக இருந்தது. அந்த விமானத்தில் செல்ல இருந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறையின் வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, 4 பயணிகளின் உடைமைகளில் வெளிநாட்டு பணம் (500 சவுதி அரேபிய ரியால்) தலா 44 தாள்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.20 லட்சத்து 16 ஆயிரத்து 390 மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை கைப்பற்றினர். தொடர்ந்து 4 பேரிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com