ரூ.20 ஆயிரம் முன்பணம்... வேலையை விட்டு செல்ல தடை? தாய்-சேய் உயிரிழப்பு

ஆஸ்பத்திரிக்கு செல்லாததால் அவருக்கு தார்ப்பாய் கூடாரத்திலேயே சிலர் பிரசவம் பார்த்ததாக தெரிகிறது.
 உயிரிழப்பு
Published on

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் சிங்காடிவாக்கத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி தேன்மொழி இருளர் சமூகத்தை சேர்ந்த இவர்கள் அரக்கோணம் சாலையில் விறகு வியாபாரி ஒருவரிடம் தார்ப்பாய் கூடாரத்தில் தங்கி கடந்த 6 மாதங்களாக வேவை செய்து வந்தனர். அவர்கள் வேலைக்காகக்காக ரூ. 20 ஆயிரம் முன்பணம் பெற்று இருந்ததாக கூறப்படுகிறது.

பிரசவம்

இந்த நிலையில் தேன்மொழி 9 மாத காப்பிணியாக இருந்தார். முன் பணமாக பெற்றதை கொடுக்காமல் வேலை பார்த்த இடத்தில் இருந்து செல்லக்கூடாது என்ற வியாபாரி மிரட்டல் விடுத்து தடுத்து வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே தேன்மொழிக்கு பிரசவவழி ஏற்பட்டது. ஆஸ்பத்திரிக்கு செல்லாததால் அவருக்கு தார்ப்பாய் கூடாரத்திலேயே சிலர் பிரசவம் பார்த்ததாக தெரிகிறது. இதில் குழந்தையும், தேன்மொழியும் இறந்தனர். இதனால் அங்கிருந்தவர்கள்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

விசாரணை

மேலும் இயற்கை மரணம் எனக்கூறி தேன்மொழியின் உடலை அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பொன்னேரிக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com