மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 25 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி - எடப்பாடி பழனிசாமி உத்தரவு

மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 25 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 25 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி - எடப்பாடி பழனிசாமி உத்தரவு
Published on

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், அரங்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்த நடராஜ் என்பவரது மகன் ஆறுமுகம் டிரான்ஸ்பார்மர் அருகே நடந்து சென்றபோது, இரும்பு கம்பி டிரான்ஸ்பார்மர் மீது உரசியதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த அருள்முகன் பாம்பு கடித்து இறந்தார்.

இவர்கள் தவிர தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மின்சாரம் தாக்கி 23 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இவர்கள் அனைவரின் குடும்பத்துக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 25 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com