குஜராத்தில் இருந்து கறவை மாடுகள் வாங்கி பால்பண்ணை அமைப்பதாக ரூ.5 கோடி மோசடி - மேலும் ஒரு முக்கிய குற்றவாளி கைது

குஜராத்தில் இருந்து கறவை மாடுகள் வாங்கி பால்பண்ணை அமைப்பதாக ரூ.5 கோடி மோசடியில் மேலும் ஒரு முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்யதனர்.
குஜராத்தில் இருந்து கறவை மாடுகள் வாங்கி பால்பண்ணை அமைப்பதாக ரூ.5 கோடி மோசடி - மேலும் ஒரு முக்கிய குற்றவாளி கைது
Published on

சென்னை திருமுல்லைவாயல் அருகே உள்ள காட்டூர் பகுதியில் கறவை மாடுகள் மூலம் பெரிய அளவில் பால்பண்ணை அமைத்து, நல்ல பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசைகாட்டி ரூ.4.81 கோடி மோசடி செய்துவிட்டதாக தனியார் நிறுவனம் ஒன்றின் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 25 பேரிடம் முதலீட்டு தொகை பெற்று மேற்கண்ட மோசடி நடத்தப்பட்டதாக புகாரில் குற்றம் சுமத்தப்பட்டது.

இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட சென்னை கொளத்தூரைச்சேர்ந்த சுந்தர்ராஜன் (வயது 67), அவரது மகன் மகேஷ்குமார் (40) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். குஜராத்தில் இருந்து கறவை மாடுகள் வாங்குவதாக கூறி, இந்த மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேலும் ஒரு முக்கிய குற்றவாளியான கார்த்திகேயன் (45) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com