

சென்னை,
பால் விலை உயர்வு தொடர்பாக வெளியான செய்தி தவறானது என ஆவின் நிர்வாகம் கூறியுள்ளது.
ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசை ஆவின் நிறுவனம் கேட்டுக் கொண்டிருப்பதாக ஊடகங்களில் வெளியான நிலையில் பால் விலை உயர்வுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
ஆவின் நிறுவனம் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தரமான பால் மற்றும் பால் பொருட்களை நியாயமான விலையில் தொடர்ந்து வழங்கி வருகிறது. பால் உற்பத்தியாளர்களின் நலன், பால் கொள்முதல் விலை மற்றும் நுகர்வோரின் நலன் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஆவின் செயல்பட்டு வருகிறது.
பால் விலை உயர்வு தொடர்பாக நாளிதழ் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியான செய்தி தவறானது. எனவே பொதுமக்கள் இதுபோன்ற உறுதிப்படுத்தப்படாத செய்திகளை நம்ப வேண்டாம் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது