மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் உண்டியல் வசூல் ரூ.51 லட்சம்

மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.51 லட்சம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் உண்டியல் வசூல் ரூ.51 லட்சம்
Published on

காஞ்சீபுரம் மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் காணிக்கைகளை கோவில் வளாகத்தில் உள்ள உண்டியலில் செலுத்துவது வழக்கம் அவ்வாறு செலுத்தப்பட்ட காணிக்கைகளை எண்ணும் பணி நடந்தது. இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.50 லட்சத்து 98 ஆயிரத்து 602 மற்றும் 415 கிராம் தங்கம் மற்றும் 756 கிராம் வெள்ளி செலுத்தி இருந்தனர். காணிக்கை எண்ணிக்கையின் போது கோவில் பரம்பரை தர்மகர்த்தா மணலி சீனிவாசன், கோவில் துணை கமிஷனர் கவெனிதா, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்உடன் இருந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com