கள்ளழகர் கோவிலில் ரூ.53 லட்சம் உண்டியல் காணிக்கை

அழகர் கோவில் திருக்கல்யாண மண்டப வளாகத்தில் உண்டியல் காணிக்கை நேற்று எண்ணப்பட்டன.
மதுரை,
கள்ளழகர் கோவில் உண்டியல்கள் அழகர் கோவில் திருக்கல்யாண மண்டப வளாகத்தில் நேற்று எண்ணப்பட்டன. இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ.53 லட்சத்து, 54, ஆயிரத்து 409, தங்கம் 32 கிராம், வெள்ளி 250 கிராம், வெளிநாட்டு டாலர் நோட்டுகளும் கிடைக்க பெற்றன.
உண்டியல் திறப்பின் போது துணை ஆணையர் யக்ஞ நாராயணன், உதவி ஆணையர் பிரதீபா, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பாண்டியராஜன், செந்தில்குமார், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளர்கள் பாலமுருகன், அருணா தேவி, மக்கள் தொடர்பு அலுவலர் முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






