திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து கடத்தி வந்த ரூ.55 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து கடத்தி வந்த ரூ.55 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து கடத்தி வந்த ரூ.55 லட்சம் தங்கம் பறிமுதல்
Published on

திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணி அளவில் சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, விமானத்தில் வந்த பெண் பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை தனியாக அழைத்து சென்று சோதனை செய்ததில் அவரது உள்ளாடையில் மறைத்து வைத்து பேஸ்ட் வடிவில் 909.5 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் அவர் புதுச்சேரியை சேர்ந்த பயணி என தெரியவந்தது. இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.55 லட்சத்து 7 ஆயிரம் ஆகும். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com