வி.ஐ.பி., வி.வி.ஐ.பி.களுக்காக ரூ.6.85 கோடி ஒதுக்கீடு

வி.ஐ.பி, வி.வி.ஐ.பி.களுக்காக ரூ.6.85 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
வி.ஐ.பி., வி.வி.ஐ.பி.களுக்காக ரூ.6.85 கோடி ஒதுக்கீடு
Published on

சென்னை,

முதலமைச்சர், அமைச்சர்களை தவிர்த்து பிற முக்கிய பிரமுகர்களின் வருகையின் போது மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய செலவுகளுக்காக ஓராண்டுக்கு ரூ.6.85 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஏ-பிரிவில் உள்ள கோவை, மதுரை, உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தலா ரூ.25 லட்சமும், பி-பிரிவில் உள்ள நெல்லை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தலா ரூ.20 லட்சமும், சி-பிரிவில் உள்ள மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் தலா ரூ.15 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com