ரூ.822 கோடி குத்தகை பாக்கி - உதகை ரேஸ் கிளப்பிற்கு சீல்

ரூ.822 கோடி குத்தகை பாக்கியை செலுத்தாததை அடுத்து கோர்ட்டு உத்தரவுப்படி வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ரூ.822 கோடி குத்தகை பாக்கி - உதகை ரேஸ் கிளப்பிற்கு சீல்
Published on

உதகமண்டலம் ,

உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே 100 ஆண்டுக்கு மேல் செயல்பட்டு வந்த உதகையில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப்பிற்கு  வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். ரூ.822 கோடி குத்தகை பாக்கியை செலுத்தாததை அடுத்து கோர்ட்டு உத்தரவுப்படி வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

குத்தகை காலம் 1978 உடன் முடிந்த நிலையில் அதன்பிறகு குத்தகை தொகையை செலுத்தாமல் ரேஸ் கிளப் இயங்கி வந்துள்ளது. அரசு நோட்டீஸ் அளித்தும் ரேஸ் கிளப் நிர்வாகம் குத்தகை பாக்கியை செலுத்தாததை அடுத்து 2006ல் வருவாய்த்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு 2019ல் குதிரை பந்தய மைதானத்தை மீட்க உத்தரவிட்டது. இதை அடுத்து உதகை கோட்டாட்சியர் மகாராஜா தலைமையில் அதிகாரிகள் 52.4 ஏக்கர் மைதானத்தை மீட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com