“மீசை மழிக்கும் சவாலுக்கு ஆர்.எஸ்.பாரதி தயாராக இருக்க வேண்டும்” - தவெக எம்எல்ஏ இசிஆர் சரவணன்

100வது சுதந்திர தினத்தன்றும் முதல்-அமைச்சர் விஜய் தான் தலைமை செயலகத்தில் தேசிய கொடி ஏற்றப்போகிறார் எனவும் கூறினார்.
சட்டமன்றத் தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியனுக்கு வாக்களிக்காதவர்களுக்கு நல்ல சாவே வராது என கூறிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு, சோழிங்கநல்லூர் தொகுதி தவெக எம்எல்ஏ இசிஆர் சரவணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Published on

சென்னை,

ஆர்.எஸ்.பாரதிக்கு கண்டனம்

இசிஆரில் நடைபெற்ற விழாவில் பேசிய இசிஆர் சரவணன், மாநகராட்சி தேர்தலில் தவெக வெற்றி பெற்றால் ஒருபக்க மீசையை மழித்துக்கொள்வேன் என ஆர்.எஸ்.பாரதி ஏற்கனவே சவால் விடுத்துள்ளதாக குறிப்பிட்ட அவர், தேர்தல் முடிவுக்குப் பிறகு அந்த சவாலை நிறைவேற்றுவதற்கு ஆர்.எஸ்.பாரதி தயாராக இருக்க வேண்டும் என கூறினார்.

100வது சுதந்திர தினம்

மேலும், 100வது சுதந்திர தினத்தன்றும் முதல்-அமைச்சர் விஜய் தான் தலைமை செயலகத்தில் தேசிய கொடி ஏற்றப்போகிறார் எனவும் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com