ரூ.10 ஆயிரம் காசோலை மாதிரி பிரசாரம்: அ.தி.மு.க.வினர் மீது நடவடிக்கை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

சென்னையில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்களிக்க கோரி ரூ.10 ஆயிரம் காசோலைகள் போன்ற மாதிரி துண்டு பிரசுரங்களை மக்களுக்கு வினியோகித்து அ.தி.மு.க.வினர் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.
ரூ.10 ஆயிரம் காசோலை மாதிரி பிரசாரம்: அ.தி.மு.க.வினர் மீது நடவடிக்கை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
Published on

சென்னை,

சென்னை பெருங்குடியை சேர்ந்த வக்கீல் சுந்தர வடிவேல் ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்களிக்க கோரி, ரூ.2 ஆயிரம், ரூ.10 ஆயிரம் எனக் குறிப்பிட்டு, காசோலைகள் போன்ற துண்டு பிரசுரங்களை அச்சடித்து மக்களுக்கு வினியோகித்து அ.தி.மு.க.வினர் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தால் பணபலன்கள் கிடைக்கும் என மக்கள் மத்தியில் தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். இந்த செயல், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஊழல் நடவடிக்கை ஆகும். இதை அனுமதித்தால் தேர்தல் நடவடிக்கைகள் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விடுவார்கள்.

எனவே இதுதொடர்பாக விசாரணை நடத்தி, காசோலை போல மாதிரி துண்டுபிரசுரங்கள் அச்சடித்து வினியோகிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த துண்டுபிரசுரங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com