தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.20.43 லட்சம் ரொக்கம் பறிமுதல்: கலெக்டர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் பறக்கும் படையினரால் பிடிக்கப்பட்டு உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து இதுவரை ரூ.6 லட்சத்து 54 ஆயிரத்து 600 ரொக்கம் விடுவிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.20.43 லட்சம் ரொக்கம் பறிமுதல்: கலெக்டர் தகவல்
Published on

இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026, வரும் 23.4.2026 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் முதல் தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் விதிமீறல்களைக் கண்காணிக்க 24 மணி நேரமும் பறக்கும் படைகள் (Flying Squads) மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் (Static Surveillance Teams) தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்கள் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களைக் கைப்பற்றும் பணியில் ஈடுபட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட விவரங்கள்: தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (மார்ச் 20) வரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் கைப்பற்றப்பட்ட ரொக்கம் மற்றும் பொருட்களின் விவரங்கள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான இளம்பகவத் கூறியதாவது:

உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்ட மொத்த ரொக்கம்: ரூ.20,43,380.

கைப்பற்றப்பட்ட இலவசப் பொருட்களின் மதிப்பு: ரூ.20,280.

பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மதிப்பு: ரூ.15,647.

உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து விடுவிக்கப்பட்ட ரொக்கம்: ரூ.6,54,600.

தேர்தல் நடத்தை விதிகளைப் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் முழுமையாகப் பின்பற்றி, தேர்தல் ஆணையத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com