ரூ.5 ஆயிரம் லஞ்சம்: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்- நெல்லை எஸ்.பி. உத்தரவு

சீதபற்பநல்லூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி மணல் திருட்டு வழக்கில் தொடர்புடைய நபரிடம் இருந்து, வழக்கில் பறிமுதல் செய்த வாகனங்களை விடுவிக்க உதவி செய்வதாகக் கூறி ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்றுள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. உத்தரவு.
Published on: 

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூர் காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற புகாரையடுத்து, அவரை மாவட்ட ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா. சாஸ்திரி உத்தரவிட்டுள்ளார்.

ரூ.5 ஆயிரம் லஞ்சம், புகார்

திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி என்பவர், மணல் திருட்டு வழக்கில் தொடர்புடைய பாலசுப்பிரமணியனிடம் இருந்து, வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க உதவி செய்வதாகக் கூறி, தனது மனைவியின் கூகுள்பே கணக்கின் மூலம் ரூ.5 ஆயிரம் பெற்றதாக புகார் எழுந்தது.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்- நெல்லை எஸ்.பி. உத்தரவு

இதுகுறித்த புகாரின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை மேற்கொள்ள திருநெல்வேலி ஊரக உட்கோட்ட ஏ.எஸ்.பி.க்கு அறிவுறுத்தப்பட்டது. அந்த விசாரணையில், புகாரில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டியதன்பேரில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டியை மாவட்ட ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா. சாஸ்திரி உத்தரவிட்டார்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com