பார்மசி ஊழியரின் வங்கி கணக்கில் தவறுதலாக ரூ.753 கோடி டெபாசிட்...!

சென்னையில் பார்மசி ஊழியரின் வங்கி கணக்கில் ரூ.753 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பார்மசி ஊழியரின் வங்கி கணக்கில் தவறுதலாக ரூ.753 கோடி டெபாசிட்...!
Published on

சென்னை,

சென்னை தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது இத்ரிஸ். இவர் பார்மசி ஊழியராக உள்ளார். இவர் நேற்று தனது நண்பருக்கு 2 ஆயிரம் ரூபாயை கோட்டக் வங்கிக்கணக்கின் மூலம் மாற்றியுள்ளார். பணத்தை மாற்றியதும் வங்கியிலிருந்து வந்த குறுஞ்செய்தியில், அவரது வங்கி கணக்கில் ரூ.753 கோடி ரூபாய் உள்ளதாக இருந்துள்ளது. இதனால் அவர் அதிர்ச்சியடைந்தார்.

எனவே சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கு போன் மூலம் அழைத்து விவரத்தை கூறியுள்ளார். உடனடியாக அவர்கள் முகமது இத்ரிஸின் வங்கி கணக்கை  முடக்கியுள்ளனர். மேலும் இதுகுறித்து அவர் விளக்கம் கேட்டும் அதிகாரிகள் எந்த பதிலும் அளிக்கவில்லை என்று அவர் கூறினார். இந்நிலையில் வங்கி கணக்கை முடக்கியது தொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதைபோலவே இதற்கு முன்னர் கோடம்பாக்கத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் வங்கி கணக்கில் 9 ஆயிரம் கோடி ரூபாயும், நேற்று தஞ்சாவூரை சேர்ந்த கணேசன் என்பவரது வங்கி கணக்கில் 756 கோடி ரூபாயும் வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில் சாமானிய மக்களின் வங்கி கணக்குகளில் அதிக தொகை வரவு வைக்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com