ஊரக உள்ளாட்சி தேர்தல்: சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் - தேர்தல் ஆணையம் அனுமதி

9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில் சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு மாநில தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் விடுபட்ட மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களிலும் 2 கட்டங்களாக, அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய நாட்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று தொடங்கியது

இந்நிலையில், 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில் சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மேலும், வேட்புமனுவை தாக்கல் செய்ய வேட்பாளர் மட்டுமே தனியாக அனுமதிக்கப்படுவார் என்றும், வேட்பாளர் கொரோனாவால் பாதிக்கபட்டால் அவரை முன்மொழிபவர் மனுத்தாக்கல் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com