தமிழ்நாட்டின் மிக உயரமான தலையாறு அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ள நீர்!

கொடைக்கானல் நுழைவாயிலில் அமைந்துள்ள புகழ்பெற்ற வெள்ளி நீர்வீழ்ச்சியிலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மிக உயரமான தலையாறு அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ள நீர்!
தலையாறு அருவி
Published on: 

திண்டுக்கல்,

கொடைக்கானலில் பெய்த கனமழையால் தமிழ்நாட்டின் மிக உயரமான தலையாறு அருவியில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

தலையாறு அருவியில் வெள்ளப்பெருக்கு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டின் மிக உயரமான தலையாறு அருவியில் வெள்ள நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மலைப்பகுதிகளில் பெய்த தொடர் மழையால் நீர்வரத்து பெருமளவு அதிகரித்துள்ளது. இதனால், 975 அடி உயரம் கொண்ட இந்த அருவியில் இருந்து பால் போல் நீர் கொட்டும் காட்சி பார்ப்பவர்களைக் கவர்ந்து வருகிறது.

வெள்ளி நீர்வீழ்ச்சியிலும் வெள்ளப்பெருக்கு

இதேபோல், கொடைக்கானல் நுழைவாயிலில் அமைந்துள்ள புகழ்பெற்ற வெள்ளி நீர்வீழ்ச்சியிலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் தண்ணீர் பழுப்பு நிறமாக மாறி, பயங்கர சத்தத்துடன் கொட்டி வருகிறது.

போக்குவரத்து பாதிப்பு

அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, வெள்ளி நீர்வீழ்ச்சிக்கு அருகேயுள்ள பிரதான சாலையில் வெள்ளநீர் பாய்ந்தோடியது. இதனால் கொடைக்கானல் நோக்கி சென்ற கார்கள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலையில் அணிவகுத்து நின்றன. இதனால் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவிப் பகுதிகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com