திருச்சி ரெயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு இந்தியில் பெயர் - சு.வெங்கடேசன் கண்டனம்

இந்தி பெயரை நீக்கி, தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்று சு.வெங்கடேசன் வலியுறுத்தி உள்ளார்.
திருச்சி ரெயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு இந்தியில் பெயர் - சு.வெங்கடேசன் கண்டனம்
Published on

மதுரை,

மதுரை சிபிஎம் எம்.பி. சு.வெங்கடேசன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரெயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு “ கர்தவ்ய த்வார்” என இந்தியில் பெயர் வைத்துள்ளது தெற்கு ரெயில்வே.

“ கர்தவ்ய த்வார்” என்றால் தமிழில் “ கடமையின் நுழைவுவாயில்” என்று பொருள். பாஜக அரசின் தற்போதைய ஒரே கடமை “ இந்தித் திணிப்பு” மட்டுமே.

தெற்கு ரெயில்வே உடனடியாக இந்தி பெயரை நீக்கி, தமிழில் பெயர் சூட்ட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com