சிவகாசியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை

சிவகாசியில் 1,150 பட்டாசு ஆலைகளில் 4 லட்சம் தொழிலாளர்களால் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டது
சிவகாசியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை
Published on

சிவகாசி,

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், புத்தாடை அணிந்தும் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினார்கள். காலை முதலே எண்ணெய் தேய்த்து குளித்து பட்டாசுகளை வெடிக்க தொடங்கினர்.

இந்த நிலையில் சிவகாசியில் தயாரான பட்டாசுகள் நாடு முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிவகாசியில் 1,150 பட்டாசு ஆலைகளில் 4 லட்சம் தொழிலாளர்களால் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிகளவில் பட்டாசுகள் விற்பனையாகி உள்ளது. தற்போது வரை 90 சதவீத பட்டாசுகள் முற்றிலுமாக விற்பனையாகி விட்டன என பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com