தபால் அலுவலகங்களில் தேசியக் கொடி விற்பனை: சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடு

கிராமப்புற தபால் அலுவலகங்கள் உள்பட தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் ஒரு தேசியக் கொடி 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தபால் அலுவலகங்களில் தேசியக் கொடி விற்பனை
Published on

தூத்துக்குடி,

இந்திய நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தபால் அலுவலகங்களில் தேசியக் கொடி விற்பனை செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அஞ்சல் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்திய நாட்டின் 80-வது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு தபால் அலுவலகங்களில் தேசியக் கொடி விற்பனை நடைபெற்று வருகிறது.

ஒரு தேசியக் கொடியின் விலை ரூ.25

ஒரு தேசியக் கொடியின் விலை ரூ.25 ஆகும். பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும், அரசு மற்றும் தனியார் துறை அலுவலர்களும், வணிகர்களும் எளிதாக மூவர்ணக்கொடியை வாங்கி பயன் பெறும் வகையில் கிராமப்புற தபால் அலுவலகங்கள் உள்பட அனைத்து தபால் அலுவலகங்களிலும் செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பு ஏற்பாட்டை அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம்.

தபால் அலுவலகங்களில் சிறப்பு ஏற்பாடு

கிராமப்புற தபால் அலுவலகங்கள் உள்பட தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் ஒரு தேசியக் கொடி ரூ.25 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தேசியக் கொடிகளுக்கான மொத்தத் தேவை ஏதேனும் இருப்பின், 9841875710, 9791655030 என்ற தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த சிறப்பு ஏற்பாட்டைப் பயன்படுத்தி தேசியக் கொடிகளை வாங்கி தங்கள் வீடுகளிலும், அலுவலகங்களிலும் ஏற்றி சுதந்திர தினத்தைக் கொண்டாடுங்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com