

சேலம்,
சேலம் அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்து நர்சிங் மாணவர் பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மேக்காடு பகுதியை சேர்ந்த ரத்தினராஜ் மகன் அபிஷ்ராஜ் (வயது 22). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் 4-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் செமஸ்டர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வாங்குவதற்காக நேற்று முன்தினம் நண்பர்களுடன் கல்லூரிக்கு புறப்பட்டார்.
இவர்கள் நாகர்கோவில்- எஸ்.எம்.வி.டி.பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண் 17236) முன்பதிவில்லாத பெட்டியில் பயணம் செய்தனர். இந்த ரெயில் நேற்று அதிகாலை மல்லூரை தாண்டி சேலம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது படிக்கட்டு அருகே சென்ற அபிஷ்ராஜ் கால் தவறி ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதை பார்த்த நண்பர்கள் கூச்சலிட்டனர்.
இதற்குள் ரெயில் சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் வந்தடைந்தது. பின்னர் இதுகுறித்து ரெயில்வே போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அங்கு ரெயிலில் இருந்த தவறி விழுந்து அபிஷ்ராஜ் தலையில் பலத்த காயம் அடைந்து சம் பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து கிடந்தார்.
இதையடுத்து மாணவரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக் காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகு றித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.