சேலம், பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கருப்பு உடை அணியக்கூடாது என்ற சுற்றறிக்கை வாபஸ்

பட்டமளிப்பு விழாவிற்கு மாணவர்கள் கருப்பு நிற ஆடை அணிந்து வரக்கூடாதென விடுக்கப்பட்ட அறிவிப்பை நிர்வாகம் திரும்பப்பெற்றது.
சேலம், பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கருப்பு உடை அணியக்கூடாது என்ற சுற்றறிக்கை வாபஸ்
Published on

சேலம்,

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா கவர்னர் தலைமையில் நாளை நடைபெற உள்ளது. இதனிடையே, முன்னதாக பல்கலைக்கழகம் அனுப்பிய சுற்றறிக்கையில், விழாவில் அனைவரும் கருப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்துவருவதை உறுதி செய்யுமாறும், கைபேசிகள் எடுத்துவருவதை தவிர்க்குமாறும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், பல்வேறு எதிர்ப்புகளை தொடர்ந்து உத்தரவை பல்கலைக்கழக நிர்வாகம் திரும்பப் பெற்றது.

மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களது நலனை கருத்தில் கொண்டு சுற்றறிக்கை திரும்ப பெற்றுக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com