குடும்பத் தகராறில் சலூன் கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடியில் ஒரு சலூன் கடைக்காரர் வீட்டிற்கு மது குடித்துவிட்டு சென்றுள்ளார். இதை அவரது மனைவி கண்டித்ததால் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.
குடும்பத் தகராறில் சலூன் கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்த சக்திவேல் மகன் முனீஸ்வரன் (வயது 34), ஆ.சண்முகபுரத்தில் சலூன் கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். முனீஸ்வரன் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவாராம் இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு முனீஸ்வரன் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் மனைவி அவரை கண்டித்துள்ளார். இதையடுத்து குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மன வேதனையடைந்த முனீஸ்வரன் தனது படுக்கையறையில் தூக்குப்பேட்டு தற்கெலை செய்து கெண்டுள்ளார். இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com