சந்தனக்கூடு திருவிழா

கோடியக்காட்டில் சந்தனக்கூடு திருவிழா நடந்தது
சந்தனக்கூடு திருவிழா
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே கோடியக்காட்டில் மஹான் அவுலியாக்கனி ஒலியுல்லாஹ் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடந்தது. முன்னதாக சந்தனக்கூடு கோடியக்காடு முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் இருந்து வாணவேடிக்கைகளுடன் ஊர்வலமாக புறப்பட்டு பல்வேறு வீதிகள் வழியாக சென்று அவுலியாக்கனி ஒலியுல்லாஹ் தர்காவை வந்தடைந்தது. இதையடுத்து அதிகாலை மஹானின் ரவ்ல சரீபுக்கு சந்தனம் பூசப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோடிக்கரை, கோடியக்காடு ஜமாத்தார்கள் மற்றும் கிராமவாசிகள் செய்து இருந்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com