கணக்க விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா

கணக்க விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்றது.
கணக்க விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
Published on

மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரம் கணக்க விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு கணக்க விநாயகருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் உட்கோட்டை, குருவாலப்பர்கோவில், சுண்ணாம்பு குழி, சம்போடை, குறுக்கு ரோடு, பள்ளிவிடை, பாகல்மேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com