தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

அரியலூரில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
Published on

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இந்த ரெயில் நிலையத்திற்கு முன்பு உள்ள சாலையோரம் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதில் பன்றி, மாடு, தெருநாய்கள் உள்ளிட்டவை சுற்றி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் துர்நாற்றம் வீசிவருவதால் அந்த வழியை பயன்படுத்துபவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். தற்போது தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வரும் நிலையில், இவ்வாறு கழிவுநீர் தேங்கி நிற்பதால் நோய்த்தொற்று பரவும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com